Share it

Sunday, January 12, 2020

மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு

கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அசைக்க முடியாத ஆளுமைகளாய் மூவேந்தர்களும் தென்னகத்தை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில், நந்தி மலையிலிருந்து களப்பிரர்கள் என்ற இனக்குழு ஒன்று மூவேந்தர்களின் மீதும் படைதொடுத்து, மூவேந்தர்களையும் வீழ்த்தி சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பராக்கிரமம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்? 

Tuesday, April 16, 2019

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா | விசேட அறிவித்தல்

வணக்கம் வாசகர்களே! 

'முடிமீட்ட மூவேந்தர்கள்' தொடருக்கு நீங்கள் அனைவரும் இதுவரை வழங்கி வந்த பேராதரவிற்கு மிக்க நன்றி. இச் சரித்திரத் தொடரை முழுமையாக தங்களுக்கு எமது வலைத்தளத்தின் ஊடாக வழங்க முடியாமைக்கு வருந்துகிறோம். 

நண்பர் எழுத்தாளர் சதீஷ் விவேகா அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவரது அனுமதி பெற்று இத் தொடர் நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. 

Monday, March 11, 2019

ருசி | சிறுகதை | ஆரூரன் விசு

சொந்தங்களோடும் நட்புகளோடும் ஆண்டாண்டாய் சொந்த ஊரில், வாழ்பவனின் சிக்கல் இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது? ஒரு வருடத்திற்கு சுமாராய் 50 முகூர்த்த நாட்கள் என்று வைத்துக் கொண்டால், குறைந்த பட்சம் 200 அழைப்புகள். சராசரியாக ஒரு முகூர்த்ததிற்கு மூன்று அல்லது நான்கு அழைப்புகள்.  தூரத்தில் மண்டபம் இருந்தால், முதலில் அந்த இடத்திற்குச் செல்வதும், அப்படியே குறைத்து, குறைத்து, வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு கடைசியாய்ச் செல்வது. ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தால், நேரமாகிப் போனாலும், காலையில் முதல் வேலையாக இரவு விட்டுப் போன இடத்திற்கு சென்று வந்துவிடுவது. இப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.

Tuesday, February 12, 2019

ஆண் ரத்தம் | சிறுகதை | ஆரூரன் விசு

ஒவ்வொரு நாள் காலையிலும் அலுவலகத்திற்குள் நுழையும் போது, அவள் தான் முதலில் கண்ணில் படுவாள்.  

சிரித்த முகத்தோடு அவள் சொல்லும் அந்தக் காலை வணக்கத்தை விட்டுவிட யாருக்குத்தான் விருப்பமிருக்கும்?  

குட்மார்னிங் சார்...

வெரி குட்மார்னிங்… என்று சொல்லியபடியே நிமிர்ந்து பார்க்கிறேன். திருத்தமான பளிச்சிடும் சேலை, அதற்கு ஏற்ற  இறுக்கமான ரவிக்கை,  நல்ல

Thursday, October 11, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 09 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் 9 


அதிகாலையில் முதன்மைத் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு குழுவாய் சரியான கால இடைவெளியில் நகரத் தொடங்கியது. எந்த ஆராவாரமும் இல்லாமல் வீரர்கள் மௌனம் காத்து அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். இரவில் கூடாரங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மரத்தின் உச்சியில் விசித்ரமான சப்தம் கேட்டு வீரர்கள் சுதாகரித்து நிமிர்ந்து பார்த்தார்கள். 

Wednesday, October 10, 2018

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 03 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு


அத்தியாயம் - 03 

"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.

வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன.

Tuesday, October 9, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் 8


மெல்ல மெல்லப் படைகள் நகரத் தொடங்கியது வனத்தினுள். சிறு சிறு துளி நீர் சேர்ந்து எவ்வாறு பிரவாகம் ஆகுமோ அதுபோல் குழுக்களாய் நகர்ந்த வீரர்கள் நடு வனத்திற்குள் சென்றதும் பெரும் படையாய் உருவெடுத்தார்கள். வீரர்களின் மத்தியில் அமைதியும் கட்டுப்பாடும் குலைந்து ஆக்ரோஷம் பிறந்தது. இது பெரும் பதட்டத்தை உருவாக்கியது தளபதிகளுக்கு. முதல்நாள் இரவு வந்ததும் தளபதிகள் அனைவரும் இரவு உணவை முடித்து ஒன்று கூடினார்கள். 

Monday, October 8, 2018

ஆறுதல் பரிசு ஆயிரம் ரூபாய் | சிறுகதை | ராசு

குடிகாரம் பேச்சு விடிஞ்சாலும் தவறாது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சரியாக காலை ஆறு மணிக்கு பல்லடம் திருப்பூர் சாலையில் தயாராக நின்றிருந்தான் சண்முகன். 

பொன்ராஜின் கேன்வாஸ் கொஞ்சம் லூசாக இருந்தது சண்முகன் காலுக்கு. பொன்ராஜை தவிர யாரும் இரவல் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் அவ்வளவு லூசான கேன்வாசை சண்முகன் உபரி கயிறு போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு சக போட்டியாளர்களை பார்வையால் எடை போட்டபடி நின்று கொண்டிருக்க காரணம்.

Saturday, September 29, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 07 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 07 


பணி முடிந்து அனைவரும் இல்லம் நோக்கி விரையும் நேரத்தில் ஆதவனும் அன்றைய பணியை முடித்துக் கிளம்பத் தயாரானது. ஒளி நிறைந்த வான் மங்கத் தொடங்கியது. பறவையினங்கள் தன் கூட்டையடைந்து கூக்குரலிட்டுத் தன்னுடைய வருகையைப் பதிவு செய்து கொண்டிருந்தது. அரண்மனை எங்கும் தீப ஒளியால் மின்னிக் கொண்டிருந்தது. அரண்மனை வாயில் காவலர்கள் உள் நுழைவோரையும் வெளியேறுபவரையும் ஒவ்வொருவராய்ப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். மாலைநேரம் என்பதால் அவ்விடம் முழுவதும் மக்கள் தலைகளால் நிரம்பிப் பரபரப்பாய் இருந்தது. 

Wednesday, September 19, 2018

கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு


அத்தியாயம் - 02 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.

Saturday, September 15, 2018

அவள் | சிறுகதை | கதிரவன்

மாலை நேரம். தங்களது பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டம். ஆர்ப்பரிக்கும் ஹாரன் சத்தம். சாலையோர வியாபாரிகளின் கூக்குரல்கள். அனைத்தையும் ஒரு சில நொடிகளில் கரு மேகம் தூறல் தந்து பெருமழையாய் பொழிந்தது. மழையின் ஒலியை தவிர எதையுமே உணர முடியாத அமைதிக்கு நடுவே சாலையோர நாற்காலியில் ஒரு உருவம் மட்டும் தனித்து அமர்ந்திருந்தது. கடைகளில் ஒதுங்கிய மக்களின் கவனம் நாற்காலியை கூர்ந்து கவனிக்க அங்கு இருப்பது ஒரு பெண் என்பதை அறிந்து ஒரு சிலர் குடையோடு அவளிடம் ஓட அவள் எந்தவித சலனமும் இன்றி அமர்ந்திருந்தாள் வானம் நோக்கி. இவர்கள் அவள் அருகில் செல்வதற்குள் ஒரு கார் வேகமாய் வந்து அவள் பக்கத்தில் நின்றதும் அதில் இருந்து வந்த நபர் "வாடாம்மா வீட்டுக்கு போகலாம். மழைன்னா உனக்கு ரொம்ப புடிக்கும்னு அப்பாவுக்கு தெரியும். அதுக்காக வெளியூர்ல வந்து இப்படி நனையணுமா?" என்றவாறு மகளை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.


முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 06 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 06 


அரசரின் வார்த்தையிலிருந்த உண்மை விளங்கித் தன்னுடைய பிழையை உணர்ந்த இளவரசர், அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து மனக் குழப்பத்துடன் தன் அறையை நோக்கி விரைந்தார். வீரர்கள் உடன் வருவதையும் மறந்து அறைக்குச் சென்று மேஜையின் மீதிருந்த ஓலையில் தளபதிகளை உடனடியாகக் கிளம்பி வருமாறு தன் கைப்பட எழுதி, தன்னுடைய முத்திரையிட்டுத் திரும்பினார். அறையின் வாயிலில் வேல் பிடித்த வீரர் நின்றிருந்தார். அவரை அருகில் அழைத்து "இதை நம் பாசறையிலிருக்கும் தளபதிகளிடம் உடனே சேர்ப்பித்து விடுங்கள். தாமதம் வேண்டாம்" என்று உத்தரவு பிறப்பித்த மறுகணம் கிளம்பினார் வீரர். 


கல்யாண வைபோகம் | அத்தியாயம் - 01 | தொடர் கதை | சிகரம் பாரதி | முதலாம் பதிப்பு

"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"

"நீ இல்லாம எப்படி ஜெய்?"

"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."

"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?"

"..................................."


Friday, September 14, 2018

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 05 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா


பயணம் - 05 


கருக்கல் கலைந்து காலை நேரக் கதிரவன் கண் சிமிட்டியெழும் நேரத்தில் பல்லவ தேசத்து அரண்மனையை நோக்கிப் புரவிகள் வேகமாய் வந்து கொண்டிருந்தது. புரவியிலிருந்த வீரரின் கையிலிருந்த இலட்சினை அவர்களைத் தடங்கலின்றி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றது. இளவரசரைக் காண அனுமதி வேண்டி முன் மண்டபத்தில் காத்திருந்தார்கள். 

இளவரசரோ உறக்கமின்றி இரவை எரித்து அந்த ஒளியில் விடியலை எதிர்பார்த்துத் தன்னுடைய அலுவல் அறையின் சாளரத்தின் ஓரம் தெரியும் மூன்றாம் பிறையைப் பார்த்தபடியே நின்றவரின் மனதில் ஆயிரம் சிந்தனைகள் முடிவில்லாமல் நீந்திக் கொண்டிருந்தது. 


ஞாபகங்கள் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி


இனிமையான ஞாபகங்கள் அதிர்ஷ்டலாப சீட்டில்
கிடைக்கும் ஒரு கோடி பரிசை விட மேலானது

ஞாபகங்கள்
அத்தியாயம் - இரண்டு
வக்கீல் வந்தியத்தேவன்

அவன் ஞாபகங்களை மீட்டுக்கொண்டே தன் குழந்தைக்கு உடைமாற்றிவிட்டிருந்தான். அதற்குள் நந்தினியும் குளித்து முடித்து அழகான பச்சை நிற சேலைக்கு மாறியிருந்தாள். பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தது அவள் அழகை மேலும் மெருகூட்டுவதாக வந்தியத்தேவன் எண்ணினான்.


Share it