Share it

Sunday, January 12, 2020

மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு

கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அசைக்க முடியாத ஆளுமைகளாய் மூவேந்தர்களும் தென்னகத்தை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில், நந்தி மலையிலிருந்து களப்பிரர்கள் என்ற இனக்குழு ஒன்று மூவேந்தர்களின் மீதும் படைதொடுத்து, மூவேந்தர்களையும் வீழ்த்தி சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பராக்கிரமம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்? 


அசோகர் படையெடுத்து பல தேசங்களை தன்னுடன் இணைத்து வந்த சமயத்தில் கூட கைப்பற்ற முடியாத மூன்று தேசமும், எப்படி களப்பிரர்களிடம் வீழ்ந்திருக்கும்? எதனால் வீழ்ச்சியடைந்திருக்கும்? யார் காரணமாய் இருந்திருப்பார்கள்? வஞ்சகத்தால் வீழ்ந்திருப்பார்களா? திட்டமிட்ட போரினாலா? சூழ்நிலை காரணமா? -இப்படியான பல கேள்விகளுக்கு, பதில் இன்றளவும் குறைவு . 

இருக்கும் விடயத்தைக் கொண்டும், கற்பனையாகவும் உருவானதே 'மகுடம் கொண்ட மூவேந்தர்கள்' நாவல். 



ஒரு தேசத்தின் ஆசை எவ்வாறு அண்டை தேசத்தை பாதிக்கிறது, அது எப்படி தொடர்ந்து மற்ற தேசத்திலும் எதிரொலிக்கிறது என்பதை மையப்படுத்தியதே இந்நாவல். 

அது யாருடைய ஆசை? அந்த ஆசை நிறைவேறியதா? இல்லை, நிராசையாய்ப் போனதா? நிறைவேறியது எனில் எதிர்த்து நின்ற தேசத்தின் வலியும் வேதனையும் எப்படி இருந்தது? நிராசை எனில் அம்மன்னனின் மனநிலை எப்படி ஆனது? அதிலிருந்து அம்மன்னன் எவ்வாறு மீண்டு வந்தான்? இப்படியான பல நிகழ்வுகளின் கோர்வையே இப்புதினம். 

என்னுடைய மனதில் ஓடிய எண்ணங்கள் எழுத்து வடிவம் பெற்று 2020 புத்தக கண்காட்சியில் குழந்தை போல் உங்களின் மடி தவழ்கிறது. இதுவரை மனதில் சுமந்ததை இன்று 'மகுடம் கொண்ட மூவேந்தர்கள்' என்ற நாமம் சூட்டி வானதி பதிப்பகத்தார் உங்களின் கரத்தில் ஒப்படைக்கிறார்கள். அதை அனைத்து வாசக நெஞ்சங்களும் வாங்கிப் படித்து தங்களின் மேலான கருத்துக்களைக் கூறுமாறு வேண்டுகிறேன். 

இவன்
சதீஷ் விவேகா 

நாவலுக்காக நான் எடுத்துக் கொண்ட ஆய்வு நூல்கள்.

  1. தமிழர் போர் நெறி - கி.வா. ஜகந்நாதன் 
  2. தமிழர் வரலாறு - பி.டி. சீனிவாச அய்யங்கார்
  3. தமிழ்நாடும் களப்பிரர் ஆட்சியும் - இரா. பன்னீர் செல்வம் 
  4. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை. சீனி வேங்கடசாமி 
  5. களப்பிர்கள் - நடன. காசிநாதன்
  6. தமிழக வரலாற்றில் களப்பிரர்_காலம் - டி.கே இராவீந்திரன்
  7. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி
  8. சோழர்கள் வரலாறு - மா. இராச மாணிக்கனார்
  9. பல்லவர் வரலாறு - மா. இராச மாணிக்கனார்
  10. பல்லவர் காலச்_செப்பேடுகள் - டாக்டர். மு. ராஜேந்திரன்
  11. தடயங்களைத் தேடி - திருச்சி பார்த்தி / இளையராஜா 
  12. கொங்கு நாட்டு வரலாறு - மயிலை சீனி வேங்கடசாமி .
  13. கொங்கு நாட்டு வரலாறு - கோவை இராமசந்திர செட்டியார்.
  14. இன்னும் பிற தரவுகள்... 
  15. இணையத்திலிருந்து...

அனைத்து ஆய்வு நூல் ஆசிரியர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் நன்றி.

குறிப்பு: 

* 'முடிமீட்ட மூவேந்தர்கள் - இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம்' என்ற தலைப்பில் நண்பர் சதீஷ் விவேகா அவர்கள் எழுதிய புதினம் இன்று 'மகுடம் கொண்ட மூவேந்தர்கள்' ஆக உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த புதினத்துக்கு உங்கள் மேலான ஆதரவை அளிக்குமாறு 'சிகரம்' வலைத்தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

விரைவில் இந்த புதினம் குறித்து எழுத்தாளர் நண்பர் சதீஷ் விவேகாவுடன் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டு உங்கள் அபிமான 'சிகரம்' வலைத்தளத்தில் பிரசுரிக்க முயற்சிக்கிறோம். 

-நன்றி 

மகுடம் கொண்ட மூவேந்தர்கள் | சரித்திரப் புதினம் | சதீஷ் விவேகா | நூல் வெளியீடு 

https://sigaram-one.blogspot.com/2020/01/magudam-konda-moovendhargal-book-launch.html
#மகுடம்_கொண்ட_மூவேந்தர்கள் #சரித்திரப்_புதினம் #சதீஷ்_விவேகா #வானதி_பதிப்பகம் #புதினம் #தமிழ் #தமிழகம் #மூவேந்தர் #சிகரம் 

No comments:

Post a Comment

Share it